நடிகர் பார்த்திபன் மகளுக்கு இளையதளபதியின் விஜயின் முதல் விருந்து

       பதிவு : Mar 10, 2018 12:41 IST    
திருமணத்திற்கு பின் முதல் விருந்து நடிகர் இளைய தளபதி விஜய் அவர்களின் வீட்டில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் முதல் விருந்து நடிகர் இளைய தளபதி விஜய் அவர்களின் வீட்டில் நடைபெற்றது.

நடிகர், இயக்குனர் மற்றும் சிறந்த எழுத்தாளரான பார்த்திபன் அவர்கள் தமிழ் திரையுலகில்  தனக்கென்று ஒரு தனி வழியை உருவாக்கியவர். இவரின் இயக்கத்தில் வெளியான 'புதிய பாதை' திரைப்படத்தில் நடித்த நடிகை சீதாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். 

இவரின் மகளும் நடிகையுமான கீர்த்தனாவின் திருமணம் சமீபத்தில் கடந்த மார்ச் 8-ஆம் தேதி அக்ஷய் என்பவருடன் நடந்து முடிந்தது. இந்த திருமணத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சினிமா பிரபலங்கள் வந்து ஆசிர்வதித்தனர். நடிகர் பார்த்திபனின் மகளான கீர்த்தனா தமிழ் திரையுலகில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான 'கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தின் மூலம் அறிமுகமானார். இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இந்த படத்தில் நடிகர் மாதவனுக்கும், சிம்ரனுக்கும் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

 

தற்போது கீர்த்தனாவின் திருமணத்திற்கு பிறகு இவருடைய முதல் விருந்து இளைய தளபதி விஜய் வீட்டில் நடந்தது. இந்த விருந்தில் நடிகர் பார்த்திபன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்ட பார்த்திபனுக்கு சிறப்பு அளிக்கப்பட்டு விஜய் அக்ஷய் - கீர்த்தனா தம்பதியினரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். தற்போது இதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Actor parthiban family @ Actor Vijay houseActor parthiban family @ Actor Vijay house

நடிகர் பார்த்திபன் மகளுக்கு இளையதளபதியின் விஜயின் முதல் விருந்து


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்