ads
தமிழ் தெலுங்கை தொடர்ந்து மலையாளத்தில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி
வேலுசாமி (Author) Published Date : Nov 28, 2018 20:23 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் 5 படங்கள் வெளியாகி விட்டன. இந்த படங்களுக்கு பிறகு அடுத்ததாக இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீதக்காதி' படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டில் சூப்பர் டீலக்ஸ், பேட்ட போன்ற படங்கள் வெளியாக உள்ளன.இவருடைய தெலுங்கு அறிமுக படமான 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் படப்பிடிப்பும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இவருடைய முதல் மலையாள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இவருடைய நடிப்பில் முன்னதாக வெளியான விக்ரம் வேதா மற்றும் 96 போன்ற படங்களால் இவருக்கு மலையாள ரசிகர்களிடமும் நல்ல ஆதரவு இருந்து வருகின்றது. இதனால் இவரை வைத்து மலையாள படம் ஒன்றை உருவாக்க சாஜன் என்ற ஒளிப்பதிவாளர் முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் நடிக்கவும் விஜய் சேதுபதி சம்மதம் தெரிய்வித்துள்ளாராம். மேலும் இந்த படத்தில் மலையாள முன்னணி நடிகரான ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.