ads

நாகேஷ் திரையரங்கம் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி

actor vijay sethupathi release nagesh thiraiyarangam movie trailer

actor vijay sethupathi release nagesh thiraiyarangam movie trailer

'நெடுஞ்சாலை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் ஆரி நடிப்பில் தற்போது 'மானே தேனே பேயே', 'நாகேஷ் திரையரங்கம்', 'கடை எண் 6' போன்ற படங்கள் உருவாகி வருகிறது. மேலும் இயக்குனர் விசட் துறை இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடிகர் ஆரி நடித்து வருகிறார். இதில் கின்னஸ் சாதனை படைத்த இயக்குனர் முகமத் இசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நாகேஷ் திரையரங்கம்' படம் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முன்னதாக இந்த படத்தின் போஸ்டர், டீசர் போன்றவை வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி இன்று மாலை 7 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி, மஸூம் சங்கர், மனோபாலா, காளி வெங்கட், லதா, சித்ரா, அணில் முரளி, சித்ரா லக்ஷ்மணன், சுவாமிநாதன், அபிலாஷ், அதுல்யா, மதன் பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

முழுக்க த்ரில்லர் காமெடியாக உருவாகியுள்ள இந்த படத்தை டிரான்சிண்டியா மீடியா மற்றும் என்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடேட் போன்ற நிறுவனங்கள் சார்பில் ராஜேந்திரன், புனிதா ராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்தை ஒரே படப்பிடிப்பில் எடுக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 'அகடம்' படத்தை இயக்கிய முகமத் இசாக் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் மூலம் மும்பையை சேர்ந்த மாடல் அழகியான மஸூம் சங்கர் என்பவர் தமிழ் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

நாகேஷ் திரையரங்கம் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி