ads

ஹரர் படத்தில் ரீ என்ட்ரி - அஜித், விக்ரம் நாயகி

mummy tamil horrer movie

mummy tamil horrer movie

முன்னணி நடிகர் அஜித், விக்ரம் போன்றவர்களுக்கு நாயகியாக நடித்தவர் பிரியங்கா திரிவேதி. இவர் ஹிந்தி, கன்னடா, தெலுங்கு மொழிகளில் நடித்து வந்ததினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் மம்மி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ஹரர் த்ரில்லராக உருவாகியுள்ள மம்மி படத்தினை 20வது வயதுடைய லோஹித் என்ற இளைஞன் இயக்கியுள்ளார். இவர் சில குறும்படங்களை இயக்கியிருப்பது குறிப்பிட்ட தக்கது. இந்த படம் கோவாவில் வாழ்ந்து வரும் ஒன்பது மாத கர்ப்பிணி தாய்க்கும் அவரது ஆறு வயது மகளுக்கும் இடையில் நடக்கும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அவரது மகளாக பாபி யுவினா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து  ‘கோலி சோடா’ மதுசூதனன் கிறிஸ்துவ பாதிரியார் வேடத்தில் நடித்துள்ளார்.  

இந்த படத்தினை பற்றி இயக்குனர் லோஹித் பேசுகையில், 

''கோவாவில் நடைபெற்ற உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் தயாராகியுள்ளது. மிகக்குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு பாட்டு, சண்டை, காமெடி இல்லாமல், அதே சமயம் இரண்டு மணி நேர மிரட்டலான ஹரர் படமாக இது தயாராகியுள்ளது. இந்த படத்திற்காக 30 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் கோவாவில் போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார். 

ரிச்சி, நிமிர் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள அஜனீஸ் லோகநாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் வேணு ஒளிப்பதிவை கவனிக்க ரவிச்சந்திரன் படத்தொகுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

  

ஹரர் படத்தில் ரீ என்ட்ரி - அஜித், விக்ரம் நாயகி