ads

விஸ்வாசம் படத்தின் கதாநாயகி

keerthi suresh

keerthi suresh

விவேகம் படத்தினை தொடர்ந்து அஜித் நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். வேதாளம் படத்தினை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கையுள்ளார். படத்திற்கு விஸ்வாசம் என்று டைட்டில் வைத்து வெளியிடப்பட்டது. விவேகம் படத்தின் சாதனையை தொடர்ந்து விஸ்வாசம் படத்தின் டைட்டிலை ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்டாக்கினார்கள். மேலும் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கவிருப்பதாகவும், படத்தினை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடுவதாகவும் கூறியுள்ளனர்.   

இந்நிலையில் படத்திற்கான நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. தற்பொழுது முன்னணி நாயகியாக இருக்கும் அனுஷ்கா, தமன்னா, நயன்தாரா போன்றவர் அஜித்துடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக எதிர்பார்த்த நிலையில் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா புது வித நாயகியை நடிக்க வைக்க இருக்கிறாராம். இதற்காக கீர்த்தி சுரேஷுடன் பேச்சி வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வந்துள்ளது. 

விஸ்வாசம் படத்தின் கதாநாயகி