சிவா இயக்கும் 'தல 58' - ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

       பதிவு : Nov 07, 2017 21:00 IST    
சிவா இயக்கும் 'தல 58' - ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

வீரம், வேதாளம், விவேகம் படத்தினை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் இணைந்துள்ள தல 58 படத்திற்கான விமர்சனங்கள் ரசிகர்களிடம் இருந்து அதிகளவு வெளிவந்து கொண்டே இருக்கிறது.    

இந்நிலையில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருந்த படங்களில் அதிகளவு வரவேற்பினை வீரம் பெற்றிருந்தது. இதன் காரணத்தினால் விவேகம் படத்தினை போன்று அல்லாமல், வீரம் படத்தினை போன்று படத்தினை எடுக்குமாறு ரசிகர்களிடம் இருந்து சிவாவிற்கு அடிக்கடி வேண்டுகோள்களாக  சென்று கொண்டே இருக்கிறது. மேலும் தல 58, வீரம் 2 படமாக இருக்குமாறு கூறுகின்றனர்.    

 

சிவா இயக்கிய மூன்று படங்களுமே v-என்ற எழுத்தில் தொடங்கியதால் தல 58 படத்திற்கும்  v-எழுத்தில் தொடங்குமாறு தலைப்பை வைக்குமாறும், சில ரசிகர்கள் தல 58 -க்கு 'விவசாயம்' என்று பெயரிட்டு ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்கள்.    

இந்நிலையில் ரசிகர்கள் தரப்பினை ஏற்று சிவா வீரம் 2 எடுப்பாரா, இல்லை புது வித தோற்றத்தில் தல அஜித்தை நடிக்க வைப்பாரா என்று இனி வரும் படக்குழுவினர்களால் வெளியிடும் செய்திகள்  மூலம் தெரிந்து கொள்ளலாம்.   

 


சிவா இயக்கும் 'தல 58' - ரசிகர்களின் எதிர்பார்ப்பு!


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்