அஜித் செய்த சாதனை அறம் படம் செய்யுமா!

       பதிவு : Nov 07, 2017 18:06 IST    
அஜித் செய்த சாதனை அறம் படம் செய்யுமா!

அஜித்துடன் இணைந்து நயன்தாரா ஏகன், பில்லா, ஆரம்பம் என மூன்று படங்களை வெற்றிகரமாக நடித்துள்ளார். இவர்களின் கூட்டணியின் நடிப்பில் வெளிவந்த இந்த மூன்று படங்களிலும்   ரசிகர்களால் அதிகளவு வரவேற்கப்பட்டிருந்தது.    

இந்நிலையில் நயன்தாரா முன்னணி நடிகர்கள் படத்தில் நடிப்பதனை தாண்டி சோலோவாகவும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்து வருகிறார். மாயா, டோரா போன்ற படங்களை தொடர்ந்து கோபி நைனார் இயக்கும் 'அறம்' படத்தில் நடித்துள்ளார்.    

 

இப்படத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்துள்ள நயன்தாரா மக்களின் நலனுக்காக பாடுப்படும் ஒரு நல்ல வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளிவரும் தேதிகள் மாற்றிக்கொண்டே இருக்கும் நிலையில் வருகிற 10ம் தேதி திரைக்கு வருவதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதே தேதியில் 2015ம் ஆண்டு தல அஜித்தின் 'வேதாளம்' வெளிவந்தது.

இப்படத்தின் வரவேற்புகள் மற்றும் தல அதில் நடித்திருந்த விதம் என அனைத்துமே அதிகளவில் நிறைந்திருந்தது. 'வேதாளம்' செய்த சாதனைகளை அறமும் செய்யும் என்பது லேடி சூப்பர்ஸ்டார் நயனின் ரசிகர்கள் எதிர்பார்ப்பு.  

 


அஜித் செய்த சாதனை அறம் படம் செய்யுமா!


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்