தல 58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா?

       பதிவு : Nov 06, 2017 18:00 IST    
தல 58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா?

விவேகம் படத்தினை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் சிவா இயக்கத்தில் தல 58 படம் உருவாக தொடங்கியிருப்பதாகவும், மேலும் விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தல 58 படத்தினை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் நமக்கு முன்பே தெரியும்.

முன்பு வெளிவந்த படத்தினை காட்டிலும் 'தல 58' படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்கயிருக்கிறாராம். இந்நிலையில் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்துள்ள தல 58 படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.  

 

இப்படத்தின் கதாநாயகி மற்றும் படத்தில் சில நட்சத்திரங்களை இணைப்பத்திற்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் படத்தினை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடுவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த படத்தின் பற்றிய சில தகவல்கள் மட்டும் வரும் நிலையில் படக்குழுவினர்களிடம் இருந்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.  


தல 58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா?


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்