நடிகர் சங்க தலைவர் விஷாலின் இரும்புத்திரை வெளியீடு தேதி அறிவிப்பு

       பதிவு : Apr 23, 2018 09:54 IST    
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இரும்புத்திரை படம் அடுத்த மாதம் 11-ஆம் தேதியில் வெளியாக உள்ளது. விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இரும்புத்திரை படம் அடுத்த மாதம் 11-ஆம் தேதியில் வெளியாக உள்ளது.

தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க தலைவரான விஷால் நடிப்பில் தற்போது சண்டக்கோழி 2, இரும்புத்திரை  போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் 'சண்டக்கோழி 2' 2005-இல் வெளியான 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். நடிகர் விஷாலுக்கு மதுரை பகுதிகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப மதுரை கதைக்களத்தில் இந்த படம் அதிரடியாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இரும்புத்திரை'. இந்த படத்தை அறிமுக இயக்குனரான பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. முதலில் இந்த படத்தில் புதுமுக நடிகர் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த படத்தின் கதை விஷாலுக்கு மிகவும் பிடித்து போக, அவரே தயாரித்து நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இந்த படத்தை பிரமாண்டமாக உருவாக்க வேண்டும் என்று கோரி முன்னணி நடிகர்களை நடிக்க வைத்துள்ளார்  விஷால். இதன்படி இந்த படத்தில் முன்னணி நடிகையான சமந்தா விஷாலுக்கு ஜோடியாகவும், ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்திலும் இணைந்துள்ளார். இவருடைய வில்லன் கதாபாத்திரத்திற்கு முதலில் நடிகர் ஆர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் தமிழ் சினிமாவில் இன்னும் வில்லனாக நடிக்க தயாராகவில்லை என ஆர்யா இந்த படத்திலிருந்து விலக ஆக்சன் கிங் வில்லனாக ஒப்பந்தம் ஆனார்.

இந்த படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் டீசர், இசை போன்றவை வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதன்படி இந்த படம் அடுத்த மாதம் மே 11-ஆம் தேதியில் வெளியாக உள்ளது.

 


நடிகர் சங்க தலைவர் விஷாலின் இரும்புத்திரை வெளியீடு தேதி அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்