ads
இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால்
வேலுசாமி (Author) Published Date : Nov 13, 2018 18:28 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால் நடிப்பில் இறுதியாக வெளியாகியுள்ள படம் 'சண்டக்கோழி 2'. இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த படத்திற்கு பிறகு புதுமுக இயக்குனர் மோகன் இயக்கத்தில் 'அயோக்யா' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விஷால், நாயை மையமாக வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கவுள்ளது. இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை த்ரிஷா ஏற்கனவே விஷாலுடன் இணைந்து 'சமர்' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் ஜோடியாக இணைகின்றனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.