ads

சட்டபூர்வமாக தனது மனைவியை பிரிந்த விஷ்ணு விஷால்

சட்டபூர்வமாக தனது மனைவியை பிரிந்த விஷ்ணு விஷால்

சட்டபூர்வமாக தனது மனைவியை பிரிந்த விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தற்போது தயாரிப்பாளராகவும் வளம் வரும் விஷ்ணு விஷால் வளர்ந்து வரும் நடிகராக திகழ்கிறார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான 'ராட்சசன்' படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பினை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் கண்டது.

இவர் தற்போது தன்னுடைய மனைவியான ரஜினி நடராஜை அதிகாரபூர்வமாக விவாகரத்து செய்ததாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.நடிகர் விஷ்ணு விஷாலும், ரஜினி நடராஜும் நான்கு வருடங்களாக காதலித்து கடந்து 2011இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. ஆனால் சமீப காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இதனால் தற்போது தன்னுடைய மனைவி ரஜினி நடராஜை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளார். எங்களுக்கு ஆண்குழந்தை இருக்கிறான். அவனை இருவரும் இணைந்து நல்ல முறையில் வளர்ப்போம், இனி நல்ல நண்பர்களாகவே இருப்போம். எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம் என்றும் நடிகர் விஷ்ணு விஷால் கேட்டு கொண்டுள்ளார்.

சட்டபூர்வமாக தனது மனைவியை பிரிந்த விஷ்ணு விஷால்