இரண்டாம் பாகமாக உருவாகிறது அஞ்சலியின் கீதாஞ்சலி திகில் படம்

       பதிவு : Mar 19, 2018 12:29 IST    
பலூன் படத்தை தொடர்ந்து அஞ்சலி கீதாஞ்சலி 2 பேய் படத்தில் நடித்து வருகிறார். பலூன் படத்தை தொடர்ந்து அஞ்சலி கீதாஞ்சலி 2 பேய் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அஞ்சலி. தமிழில் 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் 2007-ஆம் ஆண்டில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தற்போது வரை 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய நடிப்பில் தற்போது ரோசாப்பூ, பேரன்பு, காளி, காண்பது பொய், நாடோடிகள் 2, குண்டூர் டாக்கீஸ் 2 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இவரது நடிப்பில் இறுதியாக தமிழில் த்ரில்லர் படமான 'பலூன்' ஜெய், அஞ்சலி நடிப்பில் வெளியானது. நடிகை அஞ்சலி தற்போது பேய் படங்களில் அதிகமாக நடிக்க ஆசைப்படுவதாக சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

அதில் "நான் அதிகமாக தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துள்ளேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையை தேர்வு செய்து நடித்து வருகிறேன். என்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களின் வரவேற்பு இருந்து வருகிறது. நான் பேய் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். தற்போதுள்ள சூழலில் இன்றைய தலைமுறையினருக்கு பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஏற்கனவே தெலுங்கில் 'கீதாஞ்சலி' என்ற பேய் படத்தில் நடித்துள்ளேன். அதில் எனக்கு இரட்டை கதாபாத்திரம். அதில் பேயாக வந்து ஒரு கதாபாத்திரத்தில் பயமுறுத்தினேன். இந்த படம் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்த படத்திலும் பேயாக நடிக்கிறேன். இந்த படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் ஏப்ரலில் துவங்கவுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 


இரண்டாம் பாகமாக உருவாகிறது அஞ்சலியின் கீதாஞ்சலி திகில் படம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்