ads
தன் உடல்நிலை குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கோவை சரளா
வேலுசாமி (Author) Published Date : Oct 29, 2018 18:25 ISTபொழுதுபோக்கு
தற்போது சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. சிலர் வேடிக்கையாக பகிரும் தகவல்களை ஆராயாமல் உண்மை என நம்பிவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக சினிமா துறையில் நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் அதிகமாக குவிந்து வருகின்றது. இந்த வகையில், சமீபத்தில் நடிகை கோவை சரளாவின் உடல்நிலை குறித்த மோசமான தகவல்களும் வெகுவாக பரவி வந்தது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோவை சரளா கூறியதாவது "நான் நடிகை என்பதால் என்னுடைய உடல்நிலை குறித்த தகவல்கள் பலமுறை வெளிவந்தது. துவக்கத்தில் இதுபோன்ற தகவல்களினால் வருத்தப்பட்டேன். அப்புறம் இது பழகிப்போச்சு. இப்போது நான் பிரபுதேவாவுடன் இணைந்து 'தேவி 2' படத்தில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பிற்காக மொரிசியஸ் சென்று சமீபத்தில் தான் வீடு திரும்பினேன். இது தவிர விசுவாசம் மற்றும் காஞ்சனா 3 போன்ற படங்களிலும் நடித்து வருவதால் ஒரே பரபரப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் தான், நான் உடல்நிலை சரியில்லாமல் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகிஉளள்து. சினிமா பிரபலங்களை பற்றி பொய்யான தகவலை பரப்புவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அவர்களுக்கு இதில் என்ன தான் கிடைக்கிறது என்று தெரியவில்லை. இது போன்ற வதந்திகளால் ஒருவரை இறந்துவிட்டதாக கூறுவது அவரை கொலைசெய்வதற்கு சமமானது" என்று அவர் தெரிவித்துள்ளார்.