ads

டிராபிக் ராமசாமி படத்தில் இணைந்த குஷ்பூ சீமான்

Lead Actress Kushboo and Naam Thamilar Party Leader Seeman Joined in Traffic Ramasamy Movie, Image Credit - Twitter (@sri50)

Lead Actress Kushboo and Naam Thamilar Party Leader Seeman Joined in Traffic Ramasamy Movie, Image Credit - Twitter (@sri50)

இயக்குனர் விஜய் விக்ரம் இயக்கத்தில் நடிகர் மற்றும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'டிராபிக் ராமசாமி'. இந்த படத்தில் இயக்குனர் சந்திரசேகர் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சமூக போராளியான டிராபிக் ராமசாமி அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவருக்கு மனைவியாக ரோகிணி நடித்து வருகிறார். இவர்களுடன் நடிகர் பிரகாஷ் ராஜ், ஆர்கே சுரேஷ், உபாசனா, அம்பிகா, இமான் அண்ணாச்சி, மதன் பாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக சமீபத்தில் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் முன்னாள் நடிகை குஷ்பூ, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தகவல் வெளியிட்ட சில மணி நேரங்களில் சீமானுக்கு ஜோடியாக குஷ்பூ நடிக்கிறார் என பல்வேறு தகவல்கள் பரவ ஆரம்பித்தது. இதனை மறுக்கும் விதமாக நடிகை குஷ்பூ, டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பது உண்மை தான், ஆனால் சீமானுடன் இணைந்து நடிக்க வில்லை.

அவர் வேறு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நான் வேறு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளேன் அவ்வளவு தான். என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தை கிரீன் சிக்னல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஈரோடு மோகன் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு பாலமுரளி பாலு என்பவர் இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.

டிராபிக் ராமசாமி படத்தில் இணைந்த குஷ்பூ சீமான்