15 வருடம் ஆகியும் நடிகை பிரத்யூஷா மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை - அவரது தாயார்

       பதிவு : Nov 01, 2017 13:15 IST    
15 வருடம் ஆகியும் நடிகை பிரத்யூஷா மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை - அவரது தாயார்

நடிகை பிரத்யூஷா கடந்த 2002-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். தெலுங்கு நடிகையான இவர் தமிழில் மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.  இவரது மரணத்திற்கு காரணம் பெற்றோர் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து பிரத்யூஷா மற்றும் அவரது காதலன் சித்தார்த் ரெட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதில் சித்தார்த் மட்டும் உயிர் பிழைத்து கொண்டார். விசாரணையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. 

இது பற்றி தற்போது வரை விசாரணை நடந்து வருகிறது. இதனை அடுத்து அவரது தயார் "என் மகள் விஷம் குடிக்கவில்லை அவருக்கு வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றி கொலை செய்திருக்கின்றனர். மேலும் அவரது காதலன் சித்தார்த் விஷம் குடித்தது போல உதட்டில் விஷம் தடவி நடித்திருக்கிறார். அவரது கழுத்தில் நகக்கீறல்கள் இருந்ததை மறைத்திருக்கின்றனர். இந்த சம்பவத்தால் எனது மகன் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. குற்றவாளிகள் விடுதலை ஆகலாம் ஆனால் எனது மனவலியும் ஆண்டவனும் குற்றவாளிகளுக்கு கட்டாயம் தண்டனை வந்தே தீரும். 

 

நானும் கிட்டத்தட்ட 15 வருடங்களாக தனியாக போராடி வருகிறேன். எனக்கு ஆதரவாக எவரும் குரல் குடுக்க வரவில்லை. இது குறித்து போலீசாரும் ஒரு ஆதாரத்தையும் திரட்டவில்லை" என அவரது மனவேதனையை தெரிவித்துள்ளார்.


15 வருடம் ஆகியும் நடிகை பிரத்யூஷா மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை - அவரது தாயார்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்