அங்குலிகா படக்குழுவினரிடம் நஷ்ட ஈடு கேக்கும் பிரியாமணி

       பதிவு : Mar 15, 2018 14:49 IST    
முன்னணி நடிகையான பிரியாமணி தற்போது தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்தில் நஷ்ட ஈடு கேட்டு புகார் ஒன்றை அளித்துள்ளார். முன்னணி நடிகையான பிரியாமணி தற்போது தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்தில் நஷ்ட ஈடு கேட்டு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியாமணி. இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு முன்னதாக உள்ளம், கண்களால் கைது செய், அது ஒரு கனா காலம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் 'பருத்திவீரன்' படத்தின் மூலம் தனது நடிப்பால் திரைத்துறையினரை கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா போன்ற படங்கள் வெளியானது. தற்போது இவருடைய நடிப்பில் தசரதா, வியூகா, நன்ன பிரகரா, ட்வஜா போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் நஷ்ட ஈடு கேட்டு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 

தெலுங்கில் தற்போது தயாராகி வரும் 'அங்குலிகா' படத்தில் 5 வருடத்திற்கு முன்னர் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதன் பிறகு படப்பிடிப்பில் கலந்து சில காட்சிகளில் மட்டும் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் நடிக்க பிடிக்காததால் படத்தில் இருந்து விலகி விட்டார். இந்த படத்தில் நாயகனாக 'அருந்ததி' படத்தில் அனுஸ்காவுக்கு ஜோடியாக நடித்த தீபக் நடித்துள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் பிரேம் ஆர்யன் இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் ப்ரியாமணி நடித்த சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை கண்ட ப்ரியாமணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

இதனை அடுத்து தற்போது தெலுங்கு நடிகர் சங்கத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் "அங்குலிகா படத்தில் இருந்து 5 வருடங்களுக்கு முன்பே வெளியேறிவிட்டேன். ஆனால் விளம்பரத்துக்காக என்னை இந்த வீடியோவில் காட்டியுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்காக எனக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். 


அங்குலிகா படக்குழுவினரிடம் நஷ்ட ஈடு கேக்கும் பிரியாமணி


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்