மேளா தெலுங்கு படம் குறித்து மனம் திறந்த சாய் தன்ஷிகா

       பதிவு : Mar 23, 2018 18:04 IST    
நடிகை சாய் தன்ஷிகா தெலுங்கில் அறிமுகமாகவுள்ள புது படத்திற்கு மேளா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகை சாய் தன்ஷிகா தெலுங்கில் அறிமுகமாகவுள்ள புது படத்திற்கு மேளா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'பேராண்மை'  படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகை சாய் தன்ஷிகா பிரபலமானார். இவர் இதற்கு முன்பு திருடி, மனோதோடு மழைக்காலம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதன் பிறகு நாயகியாக நடிகர் அருண் விஜய்யுடன் இணைந்து 'மாஞ்சா வேலு' படத்தில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இவர் அரவான், பரதேசி, யா யா, கபாலி, உரு, சோலோ, விழித்திரு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது காலக்கூத்து, கிட்ணா, வாலுஜாடா போன்ற படங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் உருவாகி வருகிறது. இதனைதொடர்ந்து இவர் தெலுங்கு திரைக்கதை எழுத்தாளரான கிரண் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 

 

இந்த படத்திற்கு 'மேலா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாய் தன்ஷிகா அளித்த பேட்டியில் "தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர் கிரண். அவர் என்னிடம் வந்து உங்களுக்காக ஒரு கதையை உருவாக்கியுள்ளேன். இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் நானே இயக்க உள்ளேன், என்றார். அந்த கதை கேட்டதும் பிரமிப்பாக இருந்தது, உடனே ஒப்பு கொண்டேன். இந்த கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

இந்த படத்தில் இரண்டு மாறுபட்ட வேடத்தில் என்னுடையை வாழ்க்கை பயணிக்கிறது. அதில் பேய் கதாபாத்திரம் ஒன்று. இந்த படத்தில் நடிகர் சூர்யா தேஜ் நாயகனாக நடிக்கிறார். ஆனால் எனக்கு ஜோடியாக நடிக்க வில்லை. இந்த படத்தில் வரும் ஆக்சன் காட்சிகளுக்காக என்னை தயார்படுத்தி வருகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராக உள்ளது.

 


மேளா தெலுங்கு படம் குறித்து மனம் திறந்த சாய் தன்ஷிகா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்