ads

ரீமேக் படம் மூலம் மீண்டும் இரட்டை கதாபாத்திரத்தில் சமந்தா

ரீமேக் படம் மூலம் மீண்டும் இரட்டை கதாபாத்திரத்தில் சமந்தா

ரீமேக் படம் மூலம் மீண்டும் இரட்டை கதாபாத்திரத்தில் சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான சமந்தா நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 6 படங்கள் வெளியாகிவிட்டது. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான 'யூடர்ன்' படமும் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதன் பிறகு இவர் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வரும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இவர் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விக்ரமுடன் இணைந்து '10 எண்றதுக்குள்ள' படத்தில் ஹீரோயின் மற்றும் வில்லி என்ற இரண்டு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

இதன் பிறகு மீண்டும் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். தெலுங்கில் உருவாகவுள்ள இந்த படம் 'Miss Granny' என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக உருவாகவுள்ளது. இந்த படத்தில் 60 கிழவியாகவும் 20 வயது குமரியாகவும் நடிக்க உள்ளார். இந்த படத்தினை தெலுங்கு இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பினையும் விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.

ரீமேக் படம் மூலம் மீண்டும் இரட்டை கதாபாத்திரத்தில் சமந்தா