ads
மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று படத்தில் டாப்ஸி
மோகன்ராஜ் (Author) Published Date : Aug 02, 2018 11:52 ISTபொழுதுபோக்கு
மகளிர் கிரிக்கெட் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் வீராங்கனையான மித்தாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டில் 6000 ரன்களை கடந்த முதல் வீராங்கனையாக கருதப்படுகிறார். ராஜஸ்தானை சேர்ந்த இவர் தற்போது ஐதராபாத்தில் வாழ்ந்து வருகிறார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவர் சிறு வயது முதல் வீராங்கனையாக வளர்ந்தது வரை அவர் பட்ட கஷ்ட, நஷ்டங்கள் அனைத்து காட்சிகளையும் எடுக்க மித்தாலி ராஜ் சம்மதம் தெரிவித்துள்ளார். தனது கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பொருத்தமாக இருப்பார் என ஏற்கனவே மித்தாலி ராஜ் தெரிவித்திருந்தார். மேலும் அவருடைய கதாபாத்திரமும், என்னுடைய கதாபாத்திரமும் அதிக அளவில் ஒத்து போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவருடைய வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து டாப்ஸி கூறுகையில் "ஒரு வீராங்கனையின் வாழ்க்கை கதையில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. இந்த படத்தில் நடிக்க என்னை தேர்வு செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தின் கதை குறித்து இப்போது சொல்ல முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.