ads

மீண்டும் மெர்சல் கூட்டணியில் உருவாகும் தளபதி 63

மீண்டும் மெர்சல் கூட்டணியில் உருவாகும் தளபதி 63

மீண்டும் மெர்சல் கூட்டணியில் உருவாகும் தளபதி 63

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'சர்கார்' படம் பல சர்ச்சைகளை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒரு வாரத்தை கடந்து ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணைந்து 'தளபதி 63' படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி மெர்சல் மற்றும் தெறி படங்களுக்கு பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக விஜய் - அட்லீ கூட்டணி இணைகின்றது. இது தவிர மெர்சல் மற்றும் சர்கார் படங்களுக்கு பிறகு மீண்டும் இசைப்புயலின் இசையமைப்பில் 'தளபதி 63' உருவாகவுள்ளது. இந்த படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயினமன்ட் நிறுவனம் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இந்நிறுவனம் தமிழ் சினிமாவில் சந்தோஷ் சுப்ரமணியம், எங்கேயும் காதல், அவன் இவன், மாற்றான், அனேகன், தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்களுக்கு கொடுத்துள்ளது.

இந்த படங்களுக்கு பிறகு இந்நிறுவனத்தின் 19வது படமாக 'தளபதி 63' உருவாகவுள்ளது. இந்த கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தீபாவளி வாழ்த்துக்களுடன் வெளியிட்டுள்ளது. இதன் மூலமும் இந்த படமும் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வெளிவரவுள்ளது. 

மீண்டும் மெர்சல் கூட்டணியில் உருவாகும் தளபதி 63