ads

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ள பாரதிராஜா

நடிகர் மற்றும் இயக்குனரான பாரதி ராஜா, பாண்டியநாடு படத்திற்கு பிறகு மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான பாரதி ராஜா, பாண்டியநாடு படத்திற்கு பிறகு மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகரான பாரதி ராஜா 1977ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 41 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவருடைய இயக்கத்தில் 2013இல் வெளியான 'அன்னக்கொடி' படத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு 'பாண்டிய நாடு' படத்தின் மூலம் சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு இவர் குரங்கு பொம்மை, படை வீரன் போன்ற படங்களில் நடித்துளளார்.

இவருடைய இயக்கம் மற்றும் நடிப்பில் 'ஓம்' என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் 'பாண்டிய நாடு' படத்தில் பாரதிராஜாவின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் நாயகனாக நடிகர் மற்றும் இயக்குனரான சுசீந்திரன் நடிக்க உள்ளார். மூன்று இயக்குனர்கள் ஒரே படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ள பாரதிராஜா