ads

இயக்குனர் ஏஆர் முருகதாஸின் அடுத்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சர்கார் படத்திற்கு பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் படத்திற்கு பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏஆர் முருகதாஸ், ஸ்பைடர் படத்திற்கு பிறகு நடிகர் விஜயை வைத்து 'சர்கார்' படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அரசியல் கலந்த ஆக்சன் படமான இந்த படத்தின் இசை வெளியீடு வரும் அக்டொபர் 2ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்திற்காக வித்தியாசமான கதையை ஏஆர் முருகதாஸ் உருவாகியுள்ளாராம். இந்த படத்தின் பணிகளை சர்கார் வெளியீட்டிற்கு பிறகு ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'பேட்ட' படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. வரும் நவம்பர் மாதத்தில் இயக்குனர் சங்கரின் 2.0 படமும் வெளியாகவுள்ளது.

இதற்கான ப்ரோமோஷன் பணிகளிலும் ரஜினிகாந்த் விரைவில் ஈடுபடவுள்ளார். 1:45 மணிநேரம் மட்டுமே ஓடக்கூடிய இந்த படம் ஒரு பாதி முழுவதும் ரஜினிக்காகவும், மறு பாதியில் வில்லன் அம்சைக்குமாருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 'பேட்ட' படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கார்த்திக் சுப்பராஜ் படத்தின் பணிகளை முடித்த பிறகு அடுத்ததாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் ஏஆர் முருகதாஸின் அடுத்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்