ads

சர்கார் வரிசையில் சமூக அவலங்களை உணர்த்தும் அறம் 2

சர்கார் வரிசையில் சமூக அவலங்களை உணர்த்தும் அறம் 2

சர்கார் வரிசையில் சமூக அவலங்களை உணர்த்தும் அறம் 2

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது மும்முரமாக உருவாகி வரும் படம் 'அறம் 2'. பொது மக்களுக்கு சமூக கருத்துக்களை முன்வைத்து தற்போது ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் கடந்த ஆண்டில் வெளியாகி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் 'அறம்'. இந்த படத்தில் மாவட்ட ஆட்சியர் மதிவதனி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.

இந்த படத்தின் முடிவில் மக்களுக்காக தன்னுடைய கலைக்டர் பதவியை ராஜினாமா செய்வது போன்று முடித்திருந்தனர். இதன் பிறகு இரண்டாம் மக்களுக்காக என்ன செய்ய போகிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ஆழமான சமூக கருத்துக்களை கொண்டு உருவாகி வருகிறது. இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கடந்த தீபாவளிக்கு வெளியான விஜயின் 'சர்கார்' படத்தில் தற்போதுள்ள அரசியல் அவலங்களை எடுத்துரைத்தால் ஏற்பட்ட சர்ச்சைகள் இன்னும் அடங்காமல் உள்ளது. இந்நிலையில் சர்காருக்கு பிறகு சமூக கருத்துக்களை முன்வைத்து நயன்தாராவின் 'அறம் 2' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா மக்களுக்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளதாகவும், அரசியலில் களமிறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த படமும் அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.

சர்கார் வரிசையில் சமூக அவலங்களை உணர்த்தும் அறம் 2