ads
விசுவாசத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை இயக்க உள்ள சிறுத்தை சிவா
வேலுசாமி (Author) Published Date : Nov 01, 2018 18:04 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிவா, 'விவேகம்' படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் அஜித்துடன் நான்காவது முறையாக இணைந்து 'விசுவாசம்' படத்தை இயக்கி வருகிறார். பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
முன்னதாக வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதன் பிறகு விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் இசையையும் வெளியிட உள்ளனர். தற்போது இயக்குனர் சிவாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் இயக்குனர் சிவாவின் முதல் அறிமுக படமான 'சிறுத்தை' படத்திற்கு பிறகு தொடர்ந்து நடிகர் அஜித்துடன் இணைந்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் தற்போது உருவாகி வரும் விசுவாசம் உள்பட நான்கு படங்களை இயக்கியுள்ளார். இதன் பிறகு சற்று மாறுதலாக தன்னுடைய அடுத்த படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பினை அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளனர்.