ads

விஜய் தேவரகொண்டா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

விஜய் தேவரைகோண்டாவின் அடுத்த தெலுங்கு படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

விஜய் தேவரைகோண்டாவின் அடுத்த தெலுங்கு படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

காக்கா முட்டை, தர்மதுரை போன்ற படங்களின் மூலம் சினிமா உலகில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வளர்ந்து நாயகியான இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகரித்து கொண்டு வருகின்றது. இவருடைய நடிப்பில் இந்த ஆண்டில் லட்சுமி, சாமி ஸ்கொயர், செக்க சிவந்த வானம் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.

அடுத்ததாக இவருடைய நடிப்பில் வட சென்னை, கனா,  இடம் பொருள் ஏவல், துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. இது தவிர சுந்தரம் ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்து வரும் படத்திலும், இயக்குனர் கோபி நயினார் இயக்கி வரும் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கி திரையுலகில் கால் பதிக்க உள்ளார். தெலுங்கில் இயக்குனர் கிராந்தி மாதவ் இயக்கவுள்ள காதல் கலந்த ரொமான்டிக் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். மற்றொரு நாயகியாக நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவுள்ளது. 

விஜய் தேவரகொண்டா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்