ads

பொம்மை துப்பாக்கியை உண்மை நினைத்து நடிகையை சுட்டு கொன்ற போலீசார்

தற்போது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடிகையை போலீசார் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடிகையை போலீசார் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. நம் ஊரில் எளிதாக கிடைக்கும் காய்கறிகள் போன்று அமெரிக்காவில் துப்பாக்கி மிக எளிதாக கிடைக்கிறது. முதலில் தற்காப்புக்காக துவங்கப்பட்டு தற்போது கட்டுப்படுத்த முடியாத குற்றவியல் செயலாக மாறியுள்ளது. இதனால் தற்போது போலீசார் துப்பாக்கியுடன் எவரை கண்டாலும் குற்றவாளி என நினைத்து சுட்டு விடுகின்றனர்.

இந்நிலையில் பொம்மை துப்பாக்கியை உண்மை என நினைத்து ஒரு டிவி நடிகையை போலீசார் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பசாடெனா என்ற பகுதியில் வாழ்ந்து வருபவர் வனீசா மார்குயஷ். 49 வயதான இவர் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். ஏராளமான டிவி தொடர்களில் நடித்து வரும் இவர் சமீப காலமாக மன அழுத்தத்தில் தவித்து வந்துள்ளார். இவருடைய ஹவுஸ் ஓனர் காவல் துறைக்கு போன் செய்து, வனீசா தன்னை துப்பாக்கியால் மிரட்டுவதாக புகார் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவர் மன அழுத்தத்தில் தவித்து வருவதை அறிந்து அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவரிடம் ஒன்றரை மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது திடீரென வனீசா, தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து போலீசாரை சுட முயன்றுள்ளார். உடனே அவரை போலீசார் சுட்டுள்ளனர். இதில் வனீசா சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் சோதனையிட்ட போது அவர் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தற்போது வெகுவாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொம்மை துப்பாக்கியை உண்மை நினைத்து நடிகையை சுட்டு கொன்ற போலீசார்