ads

ஏஆர் ரஹ்மானின் என்னவளே பாடல் மூலம் பிரபலமான பேபி

ஏஆர் ரஹ்மானின் என்னவளே பாடல் மூலம் பிரபலமான பேபி

ஏஆர் ரஹ்மானின் என்னவளே பாடல் மூலம் பிரபலமான பேபி

தற்போது உலகம் நவீனமயமாகி விட்டதால் பொது மக்கள் தங்களுடைய திறமைகளை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு குறுகிய நேரத்திலே பிரபலமாகிவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக சினிமா சார்ந்த ஆடல், பாடல் மற்றும் காமெடி சார்ந்த விடியோக்கள் அதிக அளவில் வலம் வருகின்றன.

இந்த விடியோக்கள் மூலம் பிரபலமாகும் நபர்களுக்கு சினிமா துறையில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ஒரு கிராமத்து பெண்ணின் பாடலை கேட்டு மெய் சிலிர்த்து போன இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவருடைய திறமையை பாராட்டி தன்னுடைய பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த பேபி என்ற பெண்மணி, இசைப்புயலின் இசையமைப்பில் 1994இல் வெளியான 'காதலன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'என்னவளே' பாடலை தெலுங்கில் பாடி அசத்தியிருந்தார். இதனால் இவருடைய குரல் இசைப்புயலை மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பொது மக்களையும் கவர்ந்துள்ளது. இதன் மூலம் இவருக்கு தெலுங்கில் திரைத்துறையில் இசையமைப்பாளர் சலூரி என்பவரின் இசையமைப்பில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஏஆர் ரஹ்மானின் என்னவளே பாடல் மூலம் பிரபலமான பேபி