ரீ என்ட்ரியாகும் நஸ்ரியா - ஊட்டியில் படப்பிடிப்பு தொடக்கம்

       பதிவு : Oct 31, 2017 15:01 IST    
ரீ என்ட்ரியாகும் நஸ்ரியா - ஊட்டியில் படப்பிடிப்பு தொடக்கம்

தமிழ், மலையாளம் என இரு திரையுலகிலும் குறுகிய காலத்தில் முன்னணி நடிகை அளவிற்கு வரவேற்பினை பெற்றவர் நஸ்ரியா. இவர் தமிழில் நடித்துள்ள நேரம், ராஜா ராணி மற்றும் நய்யாண்டி போன்ற படங்களில் குறும்பு தனமான காட்சிகள் அனைவரும் ரசிக்கும் விதத்தில் அமைந்திருந்தது.   

திருமணம் நடந்ததின் காரணத்தினால் சில காலம் இடைவெளிக்கு பிறகு நஸ்ரியா மீண்டும் திரைக்கு வரவிருக்கும் செய்தி முன்னதாக வெளிவந்திருந்தது. இந்நிலையில் அஞ்சலி மேனன் இயக்கும் இப்படத்தில் நடிக்க இருக்கும் நஸ்ரியா, சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே ‘பெங்களூர் டேஸ்’ என்னும் மலையாள திரைபடத்தில் இவருடன் இணைந்துள்ளார்.     

 

பெயரிடப்படாத இந்த மலையாள படத்தில் நஸ்ரியாவுடன் இணைந்து பிருத்திவிராஜ், பார்வதி, அதுல் குல்காரனி, ரோஷன் மதெவ் சித்தார்த் மேனன் மாலா பார்வதி ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 18ம் தேதி துவங்குவதாக இருத்த நிலையில் சில காரணத்தினால் படப்பிடிப்பு எடுக்க படவில்லை.

இந்நிலையில் சற்று முன்பு வந்த தகவலின் படி, படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நவம்பர் 1ம் தேதி முதல் முதலாக  ஊட்டியில் தொடங்கயிருப்பதாக கூறுகின்றனர். எம் ரஞ்சித் யின் ரஜபுத்ர விசுவல் மீடியா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது. ஜெயசந்திரன் மற்றும் ரகு தீட்சித் இசையமைக்கும் இப்படத்தில், லிட்டில் ஸ்வயம்ப் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் பிரபாகர் எடிட்டிங்  பணியில் ஈடுப்பட்டுள்ளார்.   

 


 


ரீ என்ட்ரியாகும் நஸ்ரியா - ஊட்டியில் படப்பிடிப்பு தொடக்கம்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்