ads
நடிகர் விக்ராந்துக்கு கை கொடுத்த இயக்குனர் ஏஆர் முருகதாஸ்
புருசோத்தமன் (Author) Published Date : Aug 21, 2018 18:09 ISTபொழுதுபோக்கு
நெஞ்சில் துணிவிருந்தால் படத்திற்கு பிறகு நடிகர் விக்ராந்த், வெண்ணிலா கபடி குழு 2, சுட்டுப்பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த படம் இந்திய சினிமாவில் ஒட்டக சிவிங்கியை வைத்து உருவாகி வரும் முதல் படம்.
'பக்ரீத்' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், போன்ற பணிகளை ஜெகதீசன் சுபு என்பவர் மேற்கொள்கிறார். மேலும் M10 ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம்எஸ் முருகராஜ் இந்த படத்தினை தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் டி இமான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விக்ராந்துக்கு மனைவி கதாபாத்திரத்தில் வசுந்தரா நடித்துள்ளார்.