ads

வெளியானது விஷாலின் அயோக்யா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

வெளியானது விஷாலின் அயோக்யா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

வெளியானது விஷாலின் அயோக்யா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால் நடிப்பில் இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'அயோக்யா'. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடித்து வருகிறார்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தினை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி மது என்பவர் தயாரித்து வருகிறார். தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் இந்த படத்தின் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது. இதனால் இந்த படத்தினை அடுத்த ஆண்டில் பொங்கலை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை போன்றவற்றினையும் வெளியிட உள்ளனர்.

வெளியானது விஷாலின் அயோக்யா பர்ஸ்ட் லுக் போஸ்டர்