ads
ஜிவி பிரகாஷின் ஐங்கரன் டீசரை வெளியிடும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்
வேலுசாமி (Author) Published Date : Oct 23, 2018 17:21 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் நடிப்பில் 4G, ஐங்கரன், அடங்காதே, சர்வம் தாள மையம், ஜெயில், குப்பத்து ராஜா போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் அதர்வாவின் 'ஈட்டி' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் ரவியரசு இயக்கத்தில் 'ஐங்கரன்' படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்து வருகிறார்.ஜிவி பிரகாஷின் பிஸியான சூழலில் இந்த படத்தினை முடிப்பதற்கு தாமதமாகி விட்டது. ஒரு வழியாக இந்த படத்தின் படப்பிடிப்பினை முடித்த பிறகு படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி இந்த படத்தின் டீசரை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் நாளை (அக்டொபர் 24) வெளியிடவுள்ளார். இந்த படத்தில் சத்யா மற்றும் சைத்தான் படங்களின் மூலம் பிரபலமான சித்தார்த்தா சங்கர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை காமன் மென் பிக்ச்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்துள்ளார்.