ads
ஒரு வழியாக முடிவுக்கு வந்தது சர்கார் கதை திருட்டு சர்ச்சை
வேலுசாமி (Author) Published Date : Oct 30, 2018 18:48 ISTபொழுதுபோக்கு
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்கார்' படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இன்னும் ஒரு வாரமே உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். பொதுவாக விஜய் படம் என்றாலே பல தடைகளை தாண்டி திரைக்கு வரும். அந்த வகையில் இந்த படத்திற்கும் தற்போது கதை திருட்டு தொடர்பாக சமூக தளங்களில் குற்றச்சாட்டுக்கள் பரவி வருகிறது. முன்னதாக இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.
இந்த டீசரில் வெளிநாட்டில் இருந்து ஒட்டு போடுவதற்காக இந்தியா வந்த விஜயின் ஓட்டை கள்ள ஒட்டு போட்டுள்ளனர். இதன் மூலமாக அரசியல்வாதிகளை எதிர்ப்பது போன்று டீசர் வெளியானது. இதனை கண்டு இந்த படத்தின் கதை என்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் சமீபத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவருடைய 'செங்கோல்' கதையும் 'சர்கார்' கதையும் 90 சதவீதம் ஒத்துப்போவதாகவும் நடிகர் பாக்யராஜ் தெரிவித்திருந்தார்.
இதன் பிறகு பாக்யராஜும், இயக்குனர் ஏஆர் முருகதாஸும் இது தொடர்பாக சந்தித்து பேசியுள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் கள்ள ஒட்டு போடும் காட்சிக்காக இவருடைய பெயரை டைட்டில் கார்ட்டாக சேர்க்க இயக்குனர் ஏஆர் முருகதாஸ் ஒப்பு கொண்டுள்ளார். இதன் பிறகு சர்கார் கதை திருடப்பட்டதை ஏஆர் முருகதாஸ் ஒப்பு கொண்டுவிட்டார் என்று தகவல்கள் பரவி வருகிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்துமே ஏஆர் முருகதாஸ் தான் என்று அடித்து சொல்கிறார். இந்த படத்தின் கதை என்னுடையது என்று புகார் கூறிய வருண். சர்காருக்கு செங்கோலை பரிசாக தருவதாகவும் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக இது குறித்து கடும் வாக்குவாதங்கள் நீடித்திருந்த நிலையில் தற்போது தான் ஒரு சுமூக முடிவு கிடைத்துள்ளது.