ads

தேசிய விருது வென்றவர்களில் 11பேருக்கு மட்டும் விருது வழங்கிய குடியரசு தலைவர்

இந்த ஆண்டு தேசிய விருது வென்றவர்களில் 11 பேருக்கு மட்டுமே குடியரசு தலைவர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளார்.

இந்த ஆண்டு தேசிய விருது வென்றவர்களில் 11 பேருக்கு மட்டுமே குடியரசு தலைவர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் சிறந்த படம், இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து சிறந்த கலைஞர்களுக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு அவர்களை இந்திய அரசு கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகளும் சமீபத்தில்  அறிவிக்கப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விருதுகளை வென்றுள்ளனர். இந்த விருதுகளில் இசைபுயல் ஏஆர் ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.

சிறந்த படமாக 'டூ லேட்' படம் தேர்வாகியுள்ளது. விருது பெற்ற கலைஞர்களுக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கவுரவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குடியரசு தலைவர் விருது வென்ற கலைஞர்களில் 11 பேருக்கு மட்டுமே வழங்குவார், மீதமுள்ளவர்களுக்கு ஸ்ம்ருதி ராணி என்பவர் விருதினை வழங்கி கவுரவிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 70க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.

இந்நிலையில் குடியரசு தலைவர் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட சில கலைஞர்களுக்கு மட்டும் விருதினை வழங்கியுள்ளார். இதன் பிறகு விருது பெற்றவர்கள் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தினை தற்போது ஏஆர் ரஹ்மான் டிவிட்டரில் வெளியீட்டு 'குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களுடன் விருது பெற்ற சிலர்' என்று பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்கர் விருதினை வென்ற ஒளிபரப்பாளர் ரசூல் பூக்குட்டி 'சிலர் மட்டுமா? வருத்தம்?' என கமன்ட் செய்துள்ளார்.

தேசிய விருது வென்றவர்களில் 11பேருக்கு மட்டும் விருது வழங்கிய குடியரசு தலைவர்