ads
ஏவிஎம்மில் பூஜையுடன் துவங்கிய அரவிந் சாமியின் கள்ளபார்ட் படப்பிடிப்பு
வேலுசாமி (Author) Published Date : Sep 19, 2018 15:07 ISTபொழுதுபோக்கு
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு பிறகு நடிகர் அரவிந் சாமி நடிப்பில் அடுத்ததாக செக்க சிவந்த வானம், நரகாசூரன் போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. இந்த படங்களுக்கு பிறகு சதுரங்க வேட்டை 2, மாமாங்கம், வணங்காமுடி போன்ற படங்களின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரவிந் சாமி தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார்.
இந்த படத்தில் அரவிந் சாமி ஜோடியாக ரெஜினா நடிக்க உள்ளார். இந்த படத்தினை ராஜாபாண்டி என்பவர் இயக்க உள்ளார். இவர் முன்னதாக என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கியவர். இந்த படங்களுக்கு பிறகு அரவிந் சாமியை நாயகனாக வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு 'கள்ளபார்ட்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் நடிகர் ஆனந்த் ராஜ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஏவிஎம்மில் துவங்கியுள்ளனர். விக்ரமின் 'ஸ்கெட்ச்' படத்தினை தயாரித்துள்ள மூவிங் பிரேம் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா இசையமைக்க உள்ளார்.