தடம் படத்தில் முதல் முறையாக கையாண்டுள்ள அருண் விஜய்

       பதிவு : Jan 05, 2018 09:50 IST    
arun vijay dual role in thadam movie arun vijay dual role in thadam movie

‘குற்றம்-23’ வெற்றி படத்தினை தொடர்ந்து அருண் விஜய் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அதிரடி த்ரில்லராக உருவாகி வரும் 'தடம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் 'தடையற தாக்க' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக ‘2015ம் ஆண்டில் மிஸ் இந்தியாவாக தேர்வு பெற்ற தன்யா ஹோப் நடித்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ரேதன் தி சினிமா பீப்புள் சார்பில் இந்தேர் குமார் தயாரிக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது 50% எட்டியிருப்பதாகவும், அருண் விஜய் 'எழில்', 'கவின்' என இரண்டு வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் முதல் முறையாக இருவேடத்தில் அருண் விஜய் நடித்திருப்பது குறிப்பிட்ட தக்கது. இந்த படத்தில்  புதுமுக ஸ்மிரிதி, வித்யா பிரதீப் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.    

 


தடம் படத்தில் முதல் முறையாக கையாண்டுள்ள அருண் விஜய்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்