ads
'சாஹூ' படத்தில் அருண் விஜய் கேரக்டர் - அவரே சொன்னது...!
விக்னேஷ் (Author) Published Date : Dec 12, 2017 15:50 ISTபொழுதுபோக்கு
என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கெட்டப்பில் நடித்து ரசிகர்களை தன் வசப்டுத்திய அருண் விஜய் அதன் பிறகு பிற மொழி திரைகளிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. இந்நிலையில் தெலுங்கில் 'ப்ருஸ் லீ' படத்திலும், கன்னடத்தில் 'சக்ரவியூகா' படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் திறமையான நடிப்பின் மூலம் தெலுங்கு, கன்னட திரையிலும் ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்தார்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் உருவாக்கி வருகிற 'சாஹூ' படத்தில் முக்கிய வேடத்தில் அருண் விஜய் நடக்க இருப்பது முன்பே வெளிவந்த தகவல். இந்த படத்தில் அருண் விஜய் எதிர் மறை வேடத்தில் அதாவது வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் அருண் விஜய் அவரது ட்விட்டரில் 'நான் சாஹூ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியானது. இந்த தகவல் வெறும் வதந்தியே....நான் இந்த படம் முழுவதும் நேர்மறை வேடத்தில் நடிக்க இருக்கிறேன்' என்று பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தின் போஸ்டர் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்திருந்தது. மேலும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 20ம் தேதியில் துவங்கி ஜனவரி 9ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் அருண் விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் 'தடம்' படம் இன்னும் சில நாட்களில் வெளிவர இருப்பது குறிப்பிட்ட தக்கது.