ads

நடிகர் கார்த்தி ஆரம்பித்த டிரஸ்ட்டுக்கு நடிகர் பிரபாஸ் 75 லட்சம் நிதியுதவி

prabhas donates 75 lakhs for flood victims

prabhas donates 75 lakhs for flood victims

பாகுபலி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் பிரபாஸ். இவர் தற்போது 75 லட்சத்தை நிதியுதவி அளித்துள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 1995 - 2000 வரை நடந்த ஒரு கொள்ளை கூட்ட சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் எடுக்க பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு பல்வேறு காவல்துறை அதிகாரிகள் மற்றும் ரசிகர்களிடையே வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட விழாவில் பேசிய கார்த்தி கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக நான் ஆரம்பித்த அமைப்பிற்கு நடிகர் பிரபாஸ் 75 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்ததை தெரிவித்துள்ளார். மேலும் அவர் அளித்த நிதியுதவியை எந்த பகுதியில் எந்த காரணத்திற்காக செலவு செய்யப்பட்டது என்ற கணக்கையும் அவரிடம் ஒப்படைத்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

நடிகர் கார்த்தி ஆரம்பித்த டிரஸ்ட்டுக்கு நடிகர் பிரபாஸ் 75 லட்சம் நிதியுதவி