ads
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பாராட்டும் காவல் துணை ஆணையர்
புருசோத்தமன் (Author) Published Date : Nov 20, 2017 14:21 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் ஒரு உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் திரைப்படத்துறையினர் என பலரும் பாராட்டி வரும் நிலையில் தற்போது காவல் துறை அதிகாரிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது சென்னை மாநகரத்தின் துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன் இந்த படத்தை பார்த்து படக்குழுவினரை பெரிதும் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அதிகாரி பேசியதாவது " இந்த படம் காவல்துறை அதிகாரிகளின் உண்மையான சம்பவம். இது குற்றத்தடுப்பு நடவடிக்கையை பெருமை படுத்தும் படம். இந்த படத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் இன்று என்னுடன் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் எனது நண்பர்கள். 1995 முதல் 2005 வரை தமிழகத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலை கொள்ளைகளை தமிழக காவல்துறையினர் பல்வேறு தடுப்புகளை தாண்டி துப்புதுலக்கி பல்வேறு மாநிலங்களில் பயணம் செய்து அவர்களை கைது செய்வதே கதை. ஒரு உண்மையான கதையை ( பவெறியா கொள்ளை கூட்டத்தை டிஜிபி ஜாங்கிட் IPS தலைமையிலான குழு கண்டுபிடித்து கைது செய்த நிகழ்வு) இயக்குனர் வினோத் அவர்கள் மிக சுவாரிஸ்யமாக படமாக்க முன்வந்ததற்கு தமிழக காவல்துறை சார்பாக எங்களது வாழ்த்துக்கள்.
சினிமாவில் காவல்துறை அதிகாரி என்றால் சூர்யா தான் என்ற இடத்திற்கு தீரன் கதாபாத்திரத்தின் மூலம் நடிகர் கார்த்தி தற்போது முன்னேறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் போலீஸ் படங்களில் தீரன் படத்திற்கும் நிச்சயம் இடம் உண்டு. கிரிக்கெட் வீரரான டோனியின் வாழ்க்கை படம் 'MS Dhoni' படம் ரசிகர்களுக்கு எப்படி பிடித்திருந்ததோ அதே போல் ஒவ்வொரு காவல் துறை அதிகாரிகளுக்கும் இந்த படம் பிடிக்கும். தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தமிழ்நாடு கட்டாயமாக காத்திருக்கும். மேலும் இந்த பவெறியா ஆபரேஷனில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஜய குமார் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார்.