ads
தீரன் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் - சூர்யா
ராதிகா (Author) Published Date : Nov 18, 2017 15:00 ISTபொழுதுபோக்கு
வினோத் இயக்கத்தில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தி காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். அறம் படத்தினை போன்று இப்படத்திற்கு பல விமர்சங்கள், பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் சூர்யா படத்தின் சில கருத்துக்களை பின்வருமாறு கூறினார், தீரன் எப்படி போஸ்டரில் சொல்லப்பட்டிருக்கோ அது போன்று உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது. காவல் துறையினரின் பின்னணி, சர்விஸ், அதிகாரிகள் வழக்குகளை கையாளும் விதம் போன்றவை பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது. நாம் எடுக்கும் படங்களில் எவ்வளவுதான் கற்பனை செய்து எடுத்தாலும் உண்மை சம்பவத்தை பார்க்கும் போது பல மடங்கு ஆச்சரியத்தை அளிக்கும்.
தமிழ் நாட்டில் 10 வருடங்களுக்கு மேலாக கண்டு பிடிக்க முடியாத ஒரு வழக்கை 20 காவல் துறையினர் சேர்ந்து எப்படி கண்டு பிடித்தார்கள் என்பதினை பதிவு செய்துள்ளனர். இது ஒரு முக்கியமான பதிப்பு என்று நான் நினைக்கிறன் என்று பேசியதினை தொடர்ந்து இயக்குனர் வினோத் பற்றி கூறினார்.
சதுரங்க வேட்டையில் வினோத்தின் படைப்பு எப்படி பேசப்பட்டதோ, அது போன்று இந்த படமும் பேசப்படும். மேலும் படத்தில் இசையமைத்த ஜிப்ரான் அழகாக இசையமைத்துள்ளார் மற்றும் தியன் சூர்யனின் ஒளிப்பதிவு முழுமையாக பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சூர்யா தெரிவித்துள்ளார்.