ads

'தானா சேர்ந்த கூட்டம்' அதிகார பூர்வ அறிவிப்பு - விக்னேஷ் சிவன்

thanaa serntha kootam teaser release date

thanaa serntha kootam teaser release date

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு இன்று வரை வெகுவான வரவேற்புகள் கிடைத்து வருகிறது. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் கார்த்திக், செந்தில், நந்தனா, கலையரசன், சத்யன், ஆர்ஜே. பாலாஜி, ரம்யா கிருஷ்ணன் என திரை வட்டாரங்களே நடிக்கின்றனர்.     

இந்நிலையில் அனிருத் இசையில் வெளிவந்த 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடலுக்கு அனல் பறக்கும் வரவேற்புகள் ரசிகர்களிடமிருந்து கிடைப்பதோடு இணையதளத்தில் இந்த பாடலுக்கு புது வித கெட்டப்புகளில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

வெளிவரும் தேதியை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகார பூர்வ அறிவிப்பினை அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் டீசர் வெளியிடும் தேதியை இன்று மாலை அறிவிக்க இருப்பதாக கூறியுள்ளார். இதன் காரணத்தினால் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். 

ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு,கிரேக்கர் பிரசாத் எடிட்டிங் பணியில் ஈடுபட்டுள்ளனர். சன் பிக்சர் விநியோகம் செய்வதாக இருக்கும் இந்த படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் படத்தில் அதிகளவு காமெடி, அதிரடி ஆக்க்ஷன் கலந்திருப்பதாக கூறப்படுகிறது.    .    

'தானா சேர்ந்த கூட்டம்' அதிகார பூர்வ அறிவிப்பு - விக்னேஷ் சிவன்