சாமி ஸ்கொயரில் புது வித மாற்றம் - சந்தோசத்தில் ரசிகர்கள்

       பதிவு : Nov 14, 2017 20:00 IST    
சாமி ஸ்கொயரில் புது வித மாற்றம் - சந்தோசத்தில் ரசிகர்கள்

நேர்மையான போலீஸ் கெட்டப்பில் விக்ரம் கலக்கியிருந்த 'சாமி' படத்திற்கு அதிகளவு வரவேற்புகள் கிடைத்திருந்ததால் அதன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளனர். முதலில் 'சாமி 2' என்ற தலைப்பில் தொடங்கிய படப்பிட்டிப்பு 'சாமி ஸ்கொயர்' என்ற மாறுபட்ட தலைப்பினை படக்குழுவினர் வைத்தனர். படத்தின் பெயர் மாற்றம் சம்பந்தப்பட்ட தகவல்கள் இன்னும் சில வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரி இயக்கும் இப்படத்தினை தமீன் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புலி மற்றும் விக்ரம் நடித்த இருமுகன் படத்தினை தயாரித்த ஷிபு தமீன் தயாரிக்கவுள்ளார். முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்திலும் விக்ரம் அதிரடியில் இறங்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் த்ரிஷா சப்போட்டிங் வேடத்தில்  நடிப்பதாக தெரிந்தது. இதன் காரணத்தினால் த்ரிஷா படத்தில் இருந்து விளக்கினார்.     

 

மகளின் திருமணம் மற்றும் ஸ்கெட்ச் படத்தின் டப்பிங் என பல வித வேலைகளில் பிஸியான விக்ரம் தற்பொழுது அனைத்து பணிகளையும் முடிந்த நிலையில், த்ரிஷா வீட்டிற்கு சென்று படத்தில் நடிக்கும் படி விக்ரம் சமாதானம் செய்ததாக தகவல்கள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து த்ரிஷா சாமி ஸ்கொயர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.    


சாமி ஸ்கொயரில் புது வித மாற்றம் - சந்தோசத்தில் ரசிகர்கள்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்