துருவ நட்சத்திரம் கதை என்னனு தெரியுமா!

       பதிவு : Nov 06, 2017 14:50 IST    
துருவ நட்சத்திரம் கதை என்னனு தெரியுமா!

கெளதம் மேனன் இயக்கிய படத்தில் விக்ரம் நடித்து கொண்டிருக்கும் 'துருவநட்சத்திரம்' அதிரடி த்ரில்லர் கலந்த படமாக வெளிவரவுள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார் மற்றும் சிலர் நடித்துள்ளனர்.     

நாட்டின் பாதுகாப்புக்காக தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, பறக்கும் படை, உளவுத்துறை போன்ற அரசின் படைகளை தாண்டி ஒரு டீம் நாட்டின் பாதுகாப்புக்கு தேவைப்படுகிறது.

 

இந்த டீம் எந்த வித சட்ட திட்டங்களின் கீழ் பணிபுரிவதில்லை. ஆனால் நமக்கு தேவையான பணியை செய்து முடித்திருவார்கள். இவர்கள் யாரென்று யாருக்குமே தெரியாது, பொது மக்களில் ஒருவராக வாழ்ந்து வருவார்கள். இந்நிலையில் உளவுத்துறை, காவல் துறை போன்றவர்களுக்கு சில தகவல்கள் இந்த டீம் மூலம் போகும். இந்த டீம் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது இந்தியாவிலும் இருக்கிறது. அப்படி நாட்டிற்காக தன்னோட அடையாளங்களை மறைத்து பணிபுரியும் டீம், எவ்வாறு பணி செய்கிறார்கள், அவர்களின் வேலை, வலி, சந்தோசம், வாழ்க்கை அதை பற்றிய கதை.  

இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது Mr.K என்பவர் இந்த குழுவை உருவாக்குவது போன்றும். அந்த குழுவின் தலைவர் விக்ரம் என்றும் தெரிகிறது.
  
 

 


துருவ நட்சத்திரம் கதை என்னனு தெரியுமா!


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்