கௌதம் மேனனின் அடுத்த கட்ட அறிவிப்பு

       பதிவு : Nov 03, 2017 17:59 IST    
கௌதம் மேனனின் அடுத்த கட்ட அறிவிப்பு

விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் படங்களில் ஒன்றாக துருவ நட்சத்திரம் இடம் பெற்றுள்ளது. கெளதம் மேனன் இயக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா மற்றும் சிலர் நடித்துள்ளனர். அதிரடி, த்ரில்லர் கலந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து எடிட்டிங் பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் படத்தின் அளவு அதிகமாக இருப்பதால் மூன்று பாகங்களாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.    

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிவரும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்புகளும் இறுதிநிலைக்கு வந்துவிட்டது. இதன் காரணத்தினால் துருவ நட்சத்திரம் படத்தினை முதலில் வெளிவந்த பிறகு மூன்று வாரங்கள் இடைவெளிக்கு பிறகு   'என்னை நோக்கி பாயும் தோட்டா' வெளியிடுவதாக கௌதம் கூறியுள்ளார்.    

 

இதனை தொடர்ந்து அருண் விஜயின் 25வது படத்தினை இயக்க இருக்கிறார். 'தடம்' படத்திற்காக பாரிஸில் உடல் பயிற்சி செய்து வரும் அருண் விஜய் இன்னும் ஒரு வாரத்திற்குள் சென்னைக்கு வருவதாக அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து கௌதம் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பதாக தெரிகிறது.     


கௌதம் மேனனின் அடுத்த கட்ட அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்