ads

ஸ்கெட்ச் படத்தில் தமன்னா செய்யாததை யார் செய்தார் தெரியுமா!

ஸ்கெட்ச் படத்தில் தமன்னா செய்யாததை யார் செய்தார் தெரியுமா!

ஸ்கெட்ச் படத்தில் தமன்னா செய்யாததை யார் செய்தார் தெரியுமா!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பினை பெற்றவர் தமன்னா. இவர் தமிழில் த்ரில்லர் படமான 'தேவி' படத்தில் பிரபு தேவா ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கிடையில் பேசத்தக்க வரவேற்பினை பெற்றிருந்தார். தமிழில் ஏறக்குறைய இருபதுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தமன்னா பெரும்பாலும் அவரின் குரலில் படமாக்கப்படுவது குறைவே. இந்நிலையில் கடந்த ஆண்டு வெளிவந்த தர்மதுரை படத்தில் அவரின் சொந்த குரலில் டப் செய்து படமாக்கப்பட்டது.     

இந்நிலையில் தமன்னா தற்பொழுது விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக முதல் முதலில் ‘ஸ்கெட்ச்’ படத்தின் மூலம் இணைந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக விக்ரம் தனது டப்பிங் பணியில் ஈடுப்பட்டு தனது பணியினை முடித்துவிட்டார். இந்நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.   

தர்மதுரை படத்தினை போன்று தமன்னாவின் சொந்த குரலில் படமாக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், அவருக்கு பதிலாக எம்.எம்.மானசி என்ற டப்பிங் கலைஞர் குரல் கொடுத்துள்ளார். தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் முடிவடைந்து விட்டதாக டப்பிங் கலைஞர் எம்.எம்.மானசி அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். தர்மதுரை படத்தில் அவரின் குரலில் கவர்ந்த ரசிகர்கள் இது ஒரு ஏமாற்றமாக அமைந்து விட்டதாக கூறுகின்றனர்.   

ஸ்கெட்ச் படத்தில் தமன்னா செய்யாததை யார் செய்தார் தெரியுமா!