ads
மகள் திருமணத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்ரம்
மோகன்ராஜ் (Author) Published Date : Nov 07, 2017 14:30 ISTபொழுதுபோக்கு
நடிகர் சியான் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவனத் தலைவர் சி கே ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. மனு ரஞ்சித், திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளு பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதனை தொடர்ந்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை திருமண வரவேற்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், பல தொழில் நுட்ப நிறுவனங்கள், திரையுலக பிரபலங்கள், விக்ரமின் ரசிகர்கள், மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஒரு பட்டாளமே கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் கச்சேரி பாடல்களும் இடம் பெற்றிருந்தது. இதில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விக்ரம் ‘ஓ பட்டர்ஃப்ளை’ பாடலை பாடியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் சந்தோசத்தில் ஆரவாரத்தோடு சத்தத்தை எழுப்பினார்கள்.