'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இணைந்த மிஸ் சவுத் இந்தியா

       பதிவு : Nov 16, 2017 11:12 IST    
meera mithun joined thaana serntha kootam meera mithun joined thaana serntha kootam

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா, கீர்த்தி சுரேஷ், செந்தில், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி போன்ற நடிகர் பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அடுத்தடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி எதிர்பார்ப்புகளை வலுக்க செய்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் தற்போது 'மிஸ் சவுத் இந்தியா' பட்டம் வென்ற மீரா மிதுன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே '8 தோட்டாக்கள்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் டப்பிங் முடிந்துள்ள நிலையில் வரும் பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

 


'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இணைந்த மிஸ் சவுத் இந்தியா


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்