ads

மீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றிய பாஸ்கர் ஒரு ராஸ்கல் டீம்

baskar oru rascal release date change

baskar oru rascal release date change

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 'தனி ஒருவன்' அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. இந்த படம் கடந்த 2015ம் ஆண்டில் மலையாள திரையுலகில் இயக்குனர் சித்திக் எழுத்து மற்றும் இயக்கத்தில் மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி, நயன்தாரா, ஜே.டி.சக்ரவர்த்தி, சனூப் சந்தோஷ், பேபி அனிகா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்ற 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ரீமேக் ஆகும். இந்த ரீமேக் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக அமலா பால் நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து 'தெறி' புகழ் பேபி நைநிகா, ‘சேதுபதி’ புகழ் மாஸ்டர் ராகவன், சூரி, ரோபோ ஷங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  

 ‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் உலகநாத் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட அம்ரீஷ் இசையமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் முன்னதாகவே முடிவடைந்து படத்தினை   கடந்த ஜனவரி 12ம் தேதியில் வெளியிடுவதாக படக்குழு தகவலை வெளியிட்டிருந்தது. இதற்கு அடுத்தபடியாக சில காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதியை வருகிற 25ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.      

 இப்படத்தினை தொடர்ந்து தனி ஒருவன் அரவிந்த் சாமி நிர்மல் குமாரின் இயக்கத்தில் சதுரங்க வேட்டை 2, கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன், செல்வா இயக்கத்தில்  வணங்காமுடி மற்றும் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மணிரத்னம் , கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ள புதுப்படங்கள் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

மீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றிய பாஸ்கர் ஒரு ராஸ்கல் டீம்