ads
செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந் சாமி கதாபாத்திரம்
புருசோத்தமன் (Author) Published Date : Aug 13, 2018 17:18 ISTபொழுதுபோக்கு
தனி ஒருவன் படத்தின் மாஸ் ரீஎன்ட்ரிக்கு பிறகு நடிகர் அரவிந் சாமி நடிப்பில் போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்களுக்கு பிறகு அரவிந் சாமி நடிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமான 'செக்க சிவந்த வானம்', நிர்மல் குமார் இயக்கத்தில் 'சதுரங்க வேட்டை 2', செல்வா இயக்கத்தில் 'வணங்காமுடி', இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'நரகாசூரன்' போன்ற படங்கள் உருவாகி வருகிறது.
இது தவிர மலையாளத்தில் 'மாமாங்கம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் கார்த்திக் நரேனின் நரகாசூரன் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு வெளியீடு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'செக்க சிவந்த வானம்' படத்தின் வெளியீட்டு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரவிந் சாமி கதாபாத்திரம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி இந்த படத்தில் அரவிந் சாமி 'வரதன்' என்ற கதாபாத்திரத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்துள்ளார். இதனை அடுத்து சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோரின் கதாபாத்திரம் குறித்த தகவலையும் விரைவில் வெளியிட உள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசையையும் படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.