ads
அதர்வா, ஹன்சிகா படத்தின் சிறப்பு பூஜை
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 08, 2017 10:44 ISTபொழுதுபோக்கு
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள 'செம்ம போத ஆகாதே' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதர்வா மற்றொரு த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் ஹன்சிகா முதல் முறையாக அதர்வாவிடம் இணையவுள்ளார். 'டார்லிங்' படத்தினை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வாவின் புது வித த்ரில்லர் படம் உருவாகவுள்ளது.
இந்த படத்தின் மூலம் இது வரை கையாலாகாத போலீஸ் கெட்டப்பில் அதர்வா நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு சிறப்பு பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் அதர்வா, ஹன்சிகா, இயக்குனர் சாம் ஆண்டன், சாம் சி.எஸ், நடிகர் ப்ரெக்னெஷ்வர் உட்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு பூஜை நடைபெறும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.