இந்த வருட சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் அதிதி பாலன் விஷால் கார்த்தி

       பதிவு : Dec 29, 2017 17:22 IST    
2017 best actor actress 2017 best actor actress

சென்னை வடபழனி ஆர்கேவி ஸ்டுடியோவில் 2017-ஆம் ஆண்டின் பிலிம்டுடே விருது வழங்கும் விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுடப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க உள்ளது. இந்த விழாவில் ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். 

சிறந்த நடிகர் பட்டியலில், நடிகர் விஷால் - துப்பறிவாளன், 
சிறந்த நடிகை : அமலா பால் - வேலையில்லா பட்டதாரி2, திருட்டு பயலே -2,
சிறந்த நடிகை (சிறப்பு) : தான்யா ரவிச்சந்திரன் - கருப்பன், 
சிறந்த புது முக நடிகை : அதிதி பாலன் - அருவி,
சிறந்த புது முக நடிகர் : நந்தன் ராம் - பள்ளி பருவத்திலே,
சிறந்த வில்லன் : எஸ் ஜே சூர்யா - மெர்சல்,
சிறந்த வில்லன் (சிறப்பு) : பிரசன்னா,
சிறந்த தயாரிப்பாளர் : எஸ்.ஆர்.பிரபு - மாநகரம், அருவி, தீரன் அதிகாரம் ஒன்று,
சிறந்த இசையமைப்பாளர் : டி இமான்,
சிறந்த இசைஅமைப்பாளர் (சிறப்பு) : அம்ரிஷ்,
சிறந்த இயக்குனர் : பி வினோத் - தீரன் அதிகாரம் ஒன்று,
சிறந்த கமர்சியல் இயக்குனர் - கேவி ஆனந்த் - கவண்,
சிறந்த இயக்குனர் (சிறப்பு) : சுசி கணேசன்,

 

இது தவிர எஸ்ஏ சந்திரசேகர், டி.ராஜேந்தர், தேவா, குஷ்பூ, ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார், தம்பி ராமையா, அம்பிகா, உமாபதி, யோகிபாபு, முனீஸ்காந்த், ஆர்கே சுரேஷ், தமிழருவி மணியன் உள்ளிட்ட ஏராளாமானோர் விருது பெறுகின்றனர். இந்த விழாவின் ஏற்பாடுகளை சினிமா தயாரிப்பாளரும், பிலிம் டுடே ஆசிரியருமான பிடி செல்வகுமார், சிற்பி, பேரரசு, ஏஆர் பிரபு உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விழாவானது இந்த ஆண்டின் முதல் விருது வழங்கும் விழா என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வருட சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் அதிதி பாலன் விஷால் கார்த்தி


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்